tamilnadu

கூடுதல் வட்டி தருவதாக பாஜக வேட்பாளர் பல கோடி மோசடி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நிறுவனம் முற்றுகை

சென்னை, ஜூன் 6- முதலீடு செய்யும் பணத் திற்கு 10 முதல் 11 விழுக்காடு வட்டி தருவதாக பல நூறு  கோடி மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட் டோர் தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ஆம் ஆண்டு முதல் ‘தி  மயிலாப்பூர் இந்து சாஸ்வத  நிதி லிட்’ என்ற பெயரில் நிதி  நிறுவனம் இயங்கி வருகி றது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம்  முதல் ரூ.5 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை வைத்துள்ளனர்.

தற்போது இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் உள்ளார். தேவநாதன் யாதவ் தற்போது நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கை யாளர்களுக்கு கடந்த 6  மாதங்களுக்கு மேல் எந்த வித நிதியும் அளிக்காமல், பணம் இல்லை எனக் கூறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப் பட்ட 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு பணத்தை முழுமையாக தர  வேண்டும் எனக் கூறி மயி லாப்பூரில் உள்ள தலைமை  அலுவலகத்தை வியாழ னன்று (ஜூன்6)  முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;