காஞ்சிபுரம், ஜன. 18- சட்ட மன்ற மதிப்பீட்டு குழு கூறியும், பல தலை முறைகளாக விவசாயம் செய்யும் 460 ஏக்கர் விவ சாய நிலங்களில் சிலருக்கு பட்டாவும் மற்றவர்க ளுக்கு அனாதீனக் கணக்கிலும் வைத்துக் கொண்டு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமம். காஞ்சிபுரத்தை ஒட்டியுள்ள கிராமம் என்பதால், தற்போது இந்தப் பகுதி வளர்ச்சி அடைந்து வருகி றது. இந்த கிராமத்தில் 75 ஏக்கரில் ரூ.83 கோடியில் பட்டுப் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு கொடுப்ப தற்காக இதே பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 2112 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலை யம் நெருக்கடி மிக்க பேருந்து நிலையமாக உள்ள தால் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.38.09 கோடி ஒதுக்கியுள்ளது. புதியதாக அமைய உள்ள பேருந்து நிலையத்திற்க்காக 11.70 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் 10.30 ஏக்கர் நிலங்கள் விவசாயி களிடம் இருந்து எடுக்கப்படுகின்றன. அந்த நிலங்கள் வருவாய் துறை கணக்கில் அனாதீன நிலங்களாக பதிவாகியுள்ளன. இதுகுறித்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கூறுகையில், “இந்த நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் இல்லை. அரசுடைமை வங்கிகளில் கடன் வாங்கி பல தலைமுறைகளாக பயிர் செய்து வருகி றோம். 1977இல் ஒரு மாதத்திற்கு மட்டும் அவகாசம் அளித்து சிலருக்கு பட்டா வழங்கினர் .அரசு கால அவகாசம் கொடுக்கும்போது போதிய விவரம் இல்லாமல் ஆவணங்களை சமர்பித்து பட்டா பெறா மல் விவசாயிகள் தவறி விட்டனர்” என்றனர்.
ஆவணங்களை சேகரித்து சட்டமன்ற மதிப் பீட்டு குழுவிடமும், சென்னை நில நிர்வாக ஆணை யரிடம் விண்ணப்பித்ததில் பல மாதங்களாக நடை பெற்ற ஆய்வில், அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து 113 நபர்களில் 109 விவசாயிகள் பட்டா பெற தகுதியானவர்கள் என்றும், மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்றும் நில நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பட்டா வழங்காமல் தொடர்ந்து மாறிமாறி காலம் கடத்திக் கொண்டே வந்தனர். தற்போது பட்டா வழங்க இயலாது என்று கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாநில நிர்வாகம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கா மல் அனாதீனகணக்கில் வைத்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தாகவும் தெரிவித்தனர். சாலை விரிவாக்கத்தின் போது தேசிய நெடுஞ் சாலையில் நாலு ஏக்கர் பறிக்கப்பட்ட விவசாயி ஜெயவேல் கூறும்போது, “என்னிடம் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனது தந்தை மூலம் எனக்கு வந்தவை. புறவழிச் சாலைக்காக ஒரு ஏக்கர் விவ சாய நிலத்தை கையகப்படுத்தினர். அதற்கு எனக்கு எந்த இழப்பீடும் தரவில்லை. தற்போது பேருந்து நிலையத்துக்கு மீதமுள்ள 3 ஏக்கரும் கையகப்ப டுத்த உள்ளனர். இப்போது நான் நிர்கதியாகி விட்டேன். அரசு என் இடத்துக்கு பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார். விவசாயிகளிடம் உள்ள ஆவணங்களை மீண்டும் முறையாக பரிசீலனை செய்யவேண்டும், சட்டமன்ற மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கும் 109 விவசாயிகளுக்கும் பட்டா வழங்க அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.