சென்னை,டிச.29- கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இறந்தது விட்டதாக வாக்காளர் துணைப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறு கிறது. இந்த தேர்தலில் கலசப்பாக்கம் ஒன்றியம், எர்ணாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அந்த ஊராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மனைவி பாஞ்சாலை(65) போட்டி யிடுகிறார். இவருக்கு பூட்டு சின்னம் ஒதுக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை. இறந்து விட்ட தாக நீக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட தேர்தல் அலுவலரி டம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்ப தாவது, கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை வாக்காளர் பட்டியலில் வார்டு எண் 6 மற்றும் வரிசை எண் 25 ல் பெயர் இடம் பெற்று வாக்களித்து வந்திருக்கிறேன். மேலும் என்னு டைய வேட்பு மனு ஏற்கப்பட்டு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நடை பெற்றதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும்,தற்போது வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவரால் வாக்குச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது இதனால் வாக்குப்பதிவு கண்டிப்பாக நிற்காது. வாக்குப்பதிவு நடை பெறும். ஆனால் வாக்காளர் பட்டிய லில் பெயர் இல்லாததால் சம்பந்தப் பட்ட வேட்பாளர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த ஊராட்சி மன்றத்தின் வாக்கு சீட்டுகள் பிரிக்கப்படாம லேயே கட்டப்பட்டு தனியாக பாது காப்பாக வைக்கப்படும். இறுதியில் தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவுரை படி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். முதல் கட்டத் தேர்தலே பல்வேறு குளறுபடி, குழப்பங்கள் நிறைந்த தாக அமைந்திருந்தது. இந்த நிலை யில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பே ஒரு வேட்பாளர் இறந்துவிட்ட தாக பெயரே வாக்காளர் பட்டியலில் இறந்ததாக நீக்கியிருப்பது அந்த ஊர் மக்களிடையே மட்டுமல்ல அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்க ளிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர் விபத்து, உடல்நலக்குறைவு,தகறாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாக மரணமடைந்தால் அங்கு தேர்தல் ரத்துசெய்யப்படும். பின்னர், மறுத் தேர்தல் நடத்து வார்கள். ஆனால், இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் 5 பேர் மனு செய்தனர். மூன்று பேர் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இறுதியாக களத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் கடைசி நேரத்தில் ஒரு வேட்பாளரை வாக்க ளிக்காத நிலையை அதிகாரிகளே உருவாக்கியிருப்பதும், எந்த காரணத்தைக்கொண்டும் தேர்தல் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் தனது வாக்கை செலுத்த முடியாது என்றும் கூறுவது வேடிக்கை விநோதமானதம் மட்டுமல்ல இது சதிதிட்டமா? என்ற பெருத்த சந்தேகத்தையும் உருவாக்கியிருக்கி றது. இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பமே ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையன்று தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.