tamilnadu

img

நிவர் புயல்: சென்னையில் விமான சேவைகள் ரத்து

சென்னை:
நிவர் புயல் தாக்கம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.விமான சேவை குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.‘நிவர்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக் கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தற்போது முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள் ளதாகவும், காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனவே விமான சேவை குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

;