tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கான புதிய சேமிப்பு கணக்கு

பள்ளிக்கல்வித்துறை அசத்தல்

சென்னை, ஜூன் 1- அரசுப்பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலமாக மாணவர்களுக்கு வழங்  கப்படும் உதவித்தொகை நேரடியாக  வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படு கிறது.

இந்நிலையில், அரசுப்பள்ளி மாண வர்களுக்கு சேமிப்பு கணக்குகளை தொடங்க, தமிழ்நாடு அஞ்சல் துறை யுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்  டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்  கணக்கில் வரவு வைக்க, வங்கிகளில்  புதிய கணக்கை தொடங்க பல ஆவ ணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிக்கப் பட்டது. இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் தற்போது பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கான வங்கி கணக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது. 

தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 2 பேர் பலி
முதலமைச்சர் இரங்கல்

சென்னை, ஜூன் 1- கோவை சின்னவேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (47) என்பவர் அந்த பகுதியில் புதிதாக  வீடு கட்டி வருகிறார். தருமபுரி மாவட்டம்  பென்னாகரத்தை சேர்ந்த கோவிந்தனின்  மகன் குமார் (29) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரிடம் ஒடிசா  மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (27)  உள்ளிட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

தண்ணீர் தொட்டி கான்கிரீட் பலகை யை பிரிப்பதற்காக, தொட்டிக்குள் இறங்  கிய தொழிலாளி மனோஜ் ஆக்சிஜன்  பற்றாக்குறையால் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற குமாரும் மூச்சுத்திணறி விழுந்  தார். இதில், இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், “கட்டுமானத் தொழி லாளர்கள் இருவரும் விபத்தில் உயிரி ழந்தனர் என்ற துயரமான செய்தி யைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேத னையும் அடைந்தேன் என்று இரங்கல்  தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டா லின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் அறி வித்துள்ளார்.

வைகோவிடம் நலம் விசாரித்த முதல்வர்

சென்னை, ஜூன் 1- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த மே 25  அன்று நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார்.  இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற் பட்டது. அங்கிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலை யில், தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்  நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும்  சந்திப்பில் வைகோவின் உடல்நிலை குறித்து மு.க. ஸ்டா லின் கேட்டறிந்தார்.

கும்பகர்ணனாக மாறியதேர்தல் ஆணையம்!

செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்  பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை  அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம்  அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும். அதை  கடைசியாக எண்ணக் கூடாது. தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது கும்பகர்ணனை  போல் தூங்கக்கூடாது”என்றார். தேர்தல் அலு வலர்கள் வாக்கு எண்ணும் போது காங்கிரஸ் தொண்  டர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வாக்குச் சாவடியில் உள்ள முகவர்கள், இத்தனை நாள் உழைத்  ததை விட வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 அன்று  கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு

சென்னை, ஜூன் 1 - மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஹன்ஸ் ராஜ் வர்மா, நந்த கோபால், உமாசங்கர் ஆகிய 3 பேரும் மே 31 அன்று  அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

வணிக சிலிண்டர் விலை  ரூ.70 குறைப்பு

சென்னை, ஜூன் 1- கடந்த மே 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிகப்  பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை  ரூ.1, 911க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 1 அன்று 70 ரூபாய் 50 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்  ளது. தற்போது, சிலிண்டர் விலை ஆயிரத்து 840 ரூபாய்  50 காசுகளாக குறைந்துள்ளது. எனினும், வீட்டு பயன் பாட்டுக்காக சமையல் சிலிண்டர் விலை 818 ரூபாய் 50 காசுகளாகவே உள்ளது.



 

;