tamilnadu

img

தேசிய லோக் அதாலத்:  தமிழகத்தில் 22,546 வழக்குகளுக்கு தீர்வு.....

சென்னை:
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை  நடந்த தேசிய லோக் அதாலத்தில் 22, 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.262,28,678, 22 கிடைத்துள்ளது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கையை குறைக்க லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு உள் ளிட்ட அனைத்து மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி ஆண்டுதோறும் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் லோக் அதாலத் நடந்தது. 10 மாதங்களுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.கொரோனா காரணமாக சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் லோக் அதாலத் நடைபெறவில்லை. மற்ற மாவட்ட செசன்சு நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது.இதற்காக, பணியில் இருக்கும் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இதில், 82 ஆயிரத்து 77 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.262 கோடியே 28 லட்சத்து 67 ஆயிரத்து 822 கிடைத்துள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ராஜசேகர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;