tamilnadu

img

பூண்டி அருகே தலித் மக்கள் மீது கொலை வெறி தாக்குதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

திருவள்ளூர், ஜன.18- திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகில் உள்ள தோமூர் ஊராட்சியில் சுமார் 750 குடும் பங்கள் உள்ளன. இதில் தலித் குடும்பம் 35  மட்டுமே. சிறுபான்மையாக வசித்து வரும் தலித் மக்கள், இறப்பு போன்ற நிகழ்ச்சி களுக்கு பறை மேளம் அடிப்பதை சில மாதங்க ளாக நிறுத்தியுள்ளனர். மேளம் அடிக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் வற்புறுத்தி யுள்ளனர். ஆதிக்க சாதியினருக்கு கட்டுப்ப டாததால் கழிவுநீர் கால்வாயை தலித்  பகுதிக்கு திருப்பியுள்ளனர். குடிநீரில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஜனவரி 16 அன்று ஆதிக்க  சாதியினர் பகுதியில் திருவிழா நடைபெற்றது.  இந்த விழாவில் மேளம் அடிக்க கூரம் கிரா மத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இரு  பிரிவு மக்களுக்கும் பிரச்சினை இருப்பால்  மேளம் அடிக்காமல் திரும்பி சென்றுள்ளனர்.  

இந்த தகவலை அறிந்த ஆதிக்க சாதியை  சேர்ந்த மாசி, குமார், பாலு, ராஜகோபால், துரை, கார்த்தி, சங்கர் உட்பட 50-க்கும்  மேற்பட்டோர் கும்பலாக உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தலித் மக்களை தாக்கியுள்ளனர். தகாத வார்த்தை களாலும் திட்டியுள்ளனர். ‘எங்களை நாடி பிழைப்பு நடத்தும் நாய்கள் நீங்கள்’ என சாதி  வன்மத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலித் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், சிலம்பரசன், நாகம்  மாள், வேண்டா ஆகியோர் படுகாய மடைந்து திருவள்ளூர் அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15-கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளி களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதி யினர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தவைர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலப் பொருளாளர் இ.மோகனா, மாவட்டத் தலைவர் எழிலரசன், மாவட்டச் செயலாளர் கன்னியப்பன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் சுதாகர், நரசிம்மன் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி கள் நீலவானத்து நிலவன், சித்தார்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.