சென்னை, ஆவடி உள் ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் மக் கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.கிராமப் புறங்களில் விவசாயம் அழிந்து வருவதாலும், படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு இல்லா ததாலும் ஏதாவது வேலை கிடைக் காதா என நகரங்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் மக்கள் எண்ணிக்கைக்கேற்ப அடிப் படை வசதிகள் மேம்படவில்லை. எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இத னால் சுற்றுப்புறச் சூழல் மாசடை வதோடு சுகாதாரமும் பாதிக்கப் படுகிறது. இன்று நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கை போல மாறிவிட் டது. சேரிப் பகுதிகளில் கடுமை யான இடநெருக்கடியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடிசை, தகர கொட்டகை அமைத்து வாழும் நிலை நீடிக்கிறது. மாநகராட்சிகளில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை விவாதிக்கக் கூடிய இடமாக மாமன்றம் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மேயர், மாமன்ற உறுப்பினர்கள் எதற்கு என கேள்வி எழும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதி காரம் வழங்கி, கூடுதல் நிதி ஒதுக்கி முறையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிச்சான்றிதழ்
நரிக்குறவர் சமூகம் மிகவும் பின்தங்கியவர் (எம்பிசி) பட்டி யலில்தான் இருந்தது. அவர் களை பழங்குடி பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்தது. இதையடுத்து திமுக அரசு அவர்களை பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும் என தீர் மானம் நிறைவேற்றி ஒன்றிய அர சுக்கு அனுப்பியது. ஒன்றிய அர சும் அதை ஏற்றுக் கொண்டு, அவர் கள் இப்போது பழங்குடி பட்டி யலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் பழங்குடியின சான்றை அதிகாரிகள் உடனே வழங்கு வதில்லை. சமீபத்தில் திரு வண்ணாமலை மாவட்டத்தில் சாதிச் சான்று கிடைக்காததால் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி மேல்படிப்பிற்கு செல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டது, எத்தனை துயரமா னது! ஊராட்சி மன்றம் கூடி சில முடிவுகளை எடுத்து தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடுதான் நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறார்கள். எனவே உள்ளாட்சி அமைப்பு கள் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பாக மாற வேண் டும். அப்போதுதான் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
மாநில உரிமைகள் பறிப்பு
ஆனால் ஒன்றிய மோடி அரசு உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக அதை சீரழிக்கும் நடவடிக்கை யை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரியை உயர்த்த வேண் டுமா, வேண்டாமா என மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு வரியை உயர்த்து என மாநில அரசுகளை நிர்பந்திக்கிறது. மேலும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அர சுக்கு பல வகைகளில் நெருக்கடி யை ஏற்படுத்துகிறது.
உள்ளாட்சிகளில் தனியார்மயம்
2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயில் ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தார். 4 ஆண்டுகள் கடந்த நிலையில் 25 விழுக்காடு குடியிருப்புகளுக்குக் கூட வழங்கவில்லை. அறிவிக்கப் பட்ட குடிநீர் திட்டத்தையே முழு மையாக ஒன்றிய அரசால் நிறை வேற்ற முடியவில்லை. இதே போல் அம்ரூத் உள்ளிட்ட பல் வேறு கவர்ச்சிகரமான திட்டங் களை ஒன்றிய அரசு அறிவிக்கி றது. ஆனால் அந்த திட்டங் கள் முழுமையாக நிறைவேற்றப் படுகிறதா என்றால் இல்லை. தற்போது மிகவும் ஆபத்தான தேசிய நகர்ப்புற கொள்கையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இனி எதையும் உள்ளாட்சி நிர்வா கங்கள் மேற்கொள்ள முடியாது என்ற நிலையை உருவாக்கு கிறார்கள். குடிநீர் வழங்குவது மாநகராட்சியின் பணி. ஆனால் இப்போது ஒன்றிய அரசின் தனி யார்மயக் கொள்கையால் குடி நீர் விநியோகம் தனியார்மயமாக் கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டி ருந்த குப்பை, கழிவு நீர் வெளி யேற்றம் என அனைத்து பணி களும் தனியார்மயமாகி வருகி றது. எனவே மோடி அரசின் தனி யார்மய தாராளமயக் கொள்கை களையும் தமிழ்நாடு அரசு எதிர்க்க முன்வர வேண்டும்.
ஆவடி மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கோரிக்கை பிரச்சார இயக்க நிறைவு பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து...