tamilnadu

img

செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜி தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல எனக் கூறி நீதிபதி பரதசக்கரவர்த்தி மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இவ்வழக்கை 3 ஆவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.