tamilnadu

img

கமிஷனை குறைக்க எல்.ஐ.சி. முகவர்கள் எதிர்ப்பு

சென்னை, செப். 12- முகவர்களின் கமிஷன் தொகையை குறைப்பதைக் கண்டித்து அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம்  முழுவதும் 150 மையங்க ளில் திங்களன்று (செப். 12)  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வணிகக் கிளை முன்பு கோட்ட பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநில பொதுச்செய லாளர் எஸ்.ஏ.கலாம், கோட்ட  இணைச்செயலாளர் டி.வி.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கலாம் கூறு கையில், “35 விழுக்காடாக இருந்த முகவர்களின் கமி ஷன் தொகையை சரி பாதியாக குறைக்குமாறு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணை யம் (ஐஆர்டிஏ) எல்.ஐ.சி.  உள்ளிட்ட 26 தனியார்  இன்சூரன்ஸ் நிறுவனங்க ளுக்கு பரிந்துரை செய்துள் ளது” என்றார்.  முன்பு எல்ஐசி முகவராக இருப்பவர் வேறு நிறுவனங்களின் முகவராக செயல்படக் கூடாது என்பது விதி. ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறு வனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முகவர் 3 நிறுவனங்களில் முகவராக செயல்படலாம் என ஐஆர்டிஏ அறிவித்துள்ளது. இது படிப்படியாக முகவர் களை குறைத்து எல்ஐசி நிறுவனத்தை மூட வழி வகுக்கும் செயலாகும் என்று  கூறினார்.

;