tamilnadu

img

2 ஆம் நிலை காவலர்கள் எழுத்துத் தேர்வு: ஆணையர் ஆய்வு

சென்னை:
இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர் வால் ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆறாயிரத்து 545 பேரும், சிறைத்துறைக்கு ஏழு பெண்கள், 112 ஆண்கள் என 119 பேரும், தீயணைப்புத்துறைக்கு 458 ஆண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேவைக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிட்டது.இப்பணிகளுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 6 லட் சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் ஞாயிறன்று (டிச. 13) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வர் கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், முகக்கவசம் இல்லாதவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட் டார்கள் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.இதனையடுத்து சென்னையில் எத்திராஜ் கல்லூரி, லயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த ஆணையர்,  “12 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. ஐந்து லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 35 இடங்களில் 30ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அரசு கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரமாகப் புகார் மனு வந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக் கப்படும். சித்ரா தற்கொலை வழக்கில் ஆதாரங்கள் சேகரித்து வருகிறோம்” என்றார்.