tamilnadu

img

வ.உ.சி.-யின் தேசப்பற்றை நினைவில் கொள்வோம்: முதல்வர்....

சென்னை:
செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார்.செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்.இவ்வாறு முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.