tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம்  திமுக வேட்பாளர்  க.செல்வம் அபார வெற்றி!

காஞ்சிபுரம், ஜூன் 4- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி, திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் நடந்து வருகிறது இதில் திமுக வேட்பாளர் தொடக்க முதலே முன்னிலையில் இருந்து வந்தார்.

32 சுற்றுகள் முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்டதில் திமுக வேட்பாளர் செல்வம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 044 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 577 வாக்குகளும் பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதி வெங்கடேசன் 1 லட்சத்து 64 ஆயிரத்து 921 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்தோஷ் குமார் 1 லட்சத்து10 ஆயிரத்து 272 வாக்குகள் பெற்றனர்.

இதனால் திமுக வேட்பாளர் க.செல்வம் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு திமுக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பிளாஸ்டிக் குவியலால் பாழாகும் தென்பெண்ணை ஆறு

கடலூர்,ஜூன் 4- தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகி ஓசூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டம் வழியாக பயணித்து கடலூர் தாழங்குடா அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கும்தாமேடு தரைப்பாளத்தில் வாகன போக்குவரத்து நடக்கிறது. புதுவை மாநிலத்தை இணைக்கும் இந்த தரைப்பாளத்தில், இரவு நேரங்களில் ஏராளமானவர்கள் அந்த தரைப்பாலத்தில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். பின்னர் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசி விட்டு செல்கின்றனர்.

இது பல மாதங்களாக நடைபெறுவதால் தென்பெண்ணை ஆற்றில் பிளாஸ்டிக் குவியலாக காட்சி அளிக்கிறது. பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் ஆற்றில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் அடித்துக்கொண்டு ஆழ்கடலுக்கு செல்லும் ஆழ் கடலுக்கு செல்லும் ஆபத்து உள்ளது.  அதில் மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும்,  சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் தென் பெண்ணையாற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் குவியல்களை அப்புறப்படுத்தி சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

ந.நி.

சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

சென்னை, ஜூன் 4- பராமரிப்பு பணி  நடைபெறுவதன் காரண மாக சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்   மற்றும் புதன் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மங்க ளூரு சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்  (வண்டி எண்-16159) இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை வடக்கு மற்றும் கோவை ரயில் நிலை யங்களில் நிற்காது. பயணி களின் வசதிக்காக கூடுதலாக நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்படும். ஜம்மு-காஷ் மீர் வைஷ்னோ தேவிகட்ரா வில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் இம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் (16318) வருகிற 10ந்தேதி வரை இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை நிறுத்தத் தில் நிற்காது.

பயணிகளின் வசதிக்காக  கூடுதலாக நிறுத்தமாக போத் தனூரில் நிறுத்தப்படும்.


 

 

 

;