tamilnadu

img

அரசியல் பணியுடன் விசாரணை நிறுவனங்கள்.... சதிகளை தடுத்து நிறுத்த சிபிஎம் அழைப்பு

திருவனந்தபுரம்:
விசாரணை நிறுவனங்கள் உண்மையை கண்டறியாமல் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் நகர்வை மேற்கொண்டால், வலுவான எதிர்ப்பை தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்க கடத்தல் வழக்கில் முறையான விசாரணையை முதல்வர் விரும்பினார். அதனால் தான் மத்தியஏஜென்சிகள் விசாரணைக்கு வரும்படி கோரப்பட்டது. மோசமான வழிகளை தேர்வுசெய்யாத ஒரு அரசியல் தலைமை அவருடையது. ஆனால் புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை உருவாக்க முயற்சிக்கின்றன. அவர்கள் இங்கே தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
ஏற்கனவே புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணை முறைகளைப் பார்த்தால் அவர்கள் எப்படியாவது முதல்வரை சிக்கவைக்கும் இடத்தை நோக்கி நகர்கின்றனர். இது வெளிவரும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரண்டு அரசை பாதுகாப்பார்கள். மக்களை அணி திரட்ட ஒரு விரிவான பிரச்சாரம் தொடங்கப்படும். இது அடுத்த எல்டிஎப் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.ஆடியோ பதிவு வெளிவந்து விட்டதாகக் கூறும் பெண் (சொப்னா சுரேஷ்) குறித்து கடந்த காலங்களில் ஊடகங்களும் எதிர்ககட்சிகளும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அந்த நேரத்தில், முல்லப்பள்ளி, சென்னித்தலா ஆகியோருக்கு அவற்றின் மீதான நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் எழவில்லை. அவற்றின்மீது அவர்கள் வைத்திருக்கும் அதே நம்பகத்தன்மை இப்போது வெளிவந்துள்ள ஆடியோவிலும் உள்ளது.

வளர்ச்சியைத் தடுக்க எதிர்க்கட்சிகள் கிப்பிக்கு எதிராகத் திரும்புகிறது. கிப்பியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீண்டகால திட்டங்களில் இவ்வளவு பெரிய மூலதனத்தை முதலீடு செய்கிறது, பெரும் வளர்ச்சிக்கான திட்டங்களில் கிப்பியின் பங்கு உள்ளது. அதன் நன்மைகள் வெளிப்படையானவை. அதற்கு எதிராக திரும்பி வளர்ச்சித் திட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கிறது. சிஏஜி அறிக்கையின் உரிமைகளை மீறுவது சட்டமன்றத்துடன் தொடர்புடையது. அது அங்கு பரிசீலிக்கப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்டதன் பகுதியாக லீக்கின் இரண்டு எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில், புகார்தாரர்களே லீகைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் பனக்காட்டில் இருந்து சமரசம் செய்வதற்கான நியமிக்கப்பட்டனர். புகார் அளித்தவர்கள் லீகைச் சேர்ந்தவர்கள் என்கிற நிலையில் இதை அரசியல் ஆர்வம் என்று எப்படி கூற முடியும்.ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலிலும் சிபிஎம்சில இடங்களை போட்டியின்றி வெல்வதுண்டு. சிபிஎம் க்கு நல்ல மக்கள் ஆதரவு உள்ள பகுதிகள் இவை. அந்த இடங்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட மாட்டோம் என்று கூறியுள்ளன. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யமுடியவில்லை என யாரிடமிருந்தும் புகார் இல்லை.கொடியேரி பாலகிருஷ்ணனின் உடல்நலப்பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே. இதுபோன்று, ஒரு கட்டத்தில் சில மாற்றங்கள் கட்சியில் தேவைப்படும். அதனால் தான் அவர் விலகி நிற்பது. அதற்கு வேறு பரிமாணங்களை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கேள்விகளுக்கு பதிலளித்த விஜயராகவன் கூறினார்.

;