தமிழக அரசு இணைய விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. மீறினால், 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனை என அறிவித்துள்ளது.
இணைய விளையாட்டுகளில் பணத்தை கட்டி சூதாட பயன்படுத்தப்படும் நிதிகளின் பரிமாற்றம் தடை செய்யப்படுகிறது. விநியோகம் மற்றும் பரிசுத் தொகை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய விளையாட்டுகளை நடத்து ம் நிறுவனத்தை நடத்தும் நபர்களுக்கு இது முழுமையாக பொருந்தும். இந்த தடையா தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மாநில அரசின் முடிவைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உத்திரவின் படி, இணைய விளையாட்டுகளில் சூதாடியதை கண்டறிந்தால் ரூ.5000 அபராதமும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பொது வெளியில் விளையாட்டுகளை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த தாடையிலும் மின்னணு முறையில் பணம் மாற்றுவது, விநியோகம் செய்வது, பரிசுகளை அனுப்புவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய விளையாட்டுகளில் இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இணைய விளையாட்டுகளை தடை செய்வதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சிற்கு மாநில அரசு அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த தடை வந்துள்ளது.