tamilnadu

வழக்கறிஞர் பழனி மீது தாக்குதல் நடத்திய சாதிய அமைப்பினரை கைது செய்க!

சென்னை, ஜூன் 18- திருநெல்வேலியில், சாதி  மறுப்புத் திருமணத் தம்பதி யர்க்கு சட்டப்படியான பாது காப்பு உதவிகளை செய்து கொடுத்த வழக்கறிஞர் பழனி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவருக்கு அவப்பெயரை ஏற்  படுத்தும் வகையில் காணொலி ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பிய சாதிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்  தின் மாநில செயல் தலைவர் ஏ. கோதண்டம், பொதுச்செயலா ளர் எஸ். சிவக்குமார் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த 14.06.2024 அன்று திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்த  தம்பதிகளை கொலை வெறி யோடு தாக்குதல் நடத்த வந்த  கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நெல்லை  மாவட்டக்குழு அலுவலகத் தில் நுழைந்து அலுவலகத்தை யும்,

அதன் ஊழியர்களை யும், அங்கு பணியில் இருந்த  அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் மாநிலக்குழு  உறுப்பினரும், வழக்கறிஞரு மான திருமதி பழனி அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள் ளது. இதனை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 இந்த சம்பவத்தில் இரு சமூகங்களை சேர்ந்த திரு மண வயதை அடைந்த ஆணும், பெண்ணும் திரு மணம் செய்வதற்கு பெண்  வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டு, மேற்படி காத லர்கள் இருவரும் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தை நாடியுள்ள னர். அவர்களுக்கு காவல் துறையினர் மூலமாக சட்டப்  படியான பாதுகாப்பு ஏற்பாடு களை அந்த அலுவலகத்திலி ருந்து செய்து கொண்டு இருந்த வழக்கறிஞர் பழனி மீது அலு வலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டாரும், சில சாதிய அமைப்பை சேர்ந்தவர்களும் தாக்குதல் நடத்தியதில் அவர் நிலைகுலைந்து போய் நாற்  காலியில் அமர்ந்து இருந்த நிலையில், அவரிடம் தங்கள்  பெண்ணை மீட்டுத் தருமாறு  கேட்பது போல் காணொளி ஒன்று தாக்குதல் நடத்த  வந்த கும்பலால் எடுக்கப்பட் டுள்ளது.

மேற்படி காணொளியை சமூக வலைதளத்தில் பதி வேற்றி அவருடைய நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரை சித்தரித்து  வருபவர்களை அகில இந்திய  வழக்கறிஞர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது. வயதிற்கு வந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த ஆணும், பெண்ணும்  தங்களுக்கான இணையரை விரும்பித் தேர்வு செய்து திரு மணம் செய்து கொள்வதை சட்டங்கள் அனுமதிக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் காதல் திருமணம் செய்ய விரும்பிய ஜோடிகளுக்கு சட்டத்தின் ஆட்சி வழி நின்று சட்டபடியான உதவிகளை செய்ய முற்பட்ட வழக்கறிஞர் பழனி உள்ளிட்டவர்கள் மீது சட்ட விரோதமான முறையில் தாக்குதல் நடத்தியதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்  கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேற்படி தாக்குதல் சம்ப வத்தில் ஈடுபட்ட அனைவரை யும் கைது செய்து உரிய சட்  டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்று அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வழக்  கறிஞர் பழனி அவர்களின் நற்  பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்து வகையில் செயல்பட்டு வரும்  சமூக விரோத கும்பல் மீது காவல்துறை சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அகில இந் தி ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட் டுக் கொள்கிறது.  அவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.