tamilnadu

img

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், திருப்பத்தூருக்கு நந்தகோபால் ஐஏஎஸ், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.