சென்னை:
எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது என்று உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் தவறானது என்றும் திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வதந்திகளை நம்ப வேண் டாம் என்றும் வேண்டுகோள் விடுத் துள்ளது.திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நிவாரண உதவி வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாகவும் சில ஊடங்கங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வேகமாக பரவின.இதை உண்மை என்று நம்பிய திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் செய்திகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து திமுக தலைமை இதை முற்றிலும் வதந்தி என மறுத்துள்ளது.இதனிடையே சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு லேசான மயக்கம் மற்றும்
உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி பரிசோதனை செய்யப்பட்டது, மற்றபடி ஏதும் இல்லை” என தெரிவித்தார்.