சென்னை:
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி,விருதுநகர், நெல்லை, இராமநாதபுரம், தேனி, கடலூர், விழுப்புரம், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.