சென்னை, டிச. 21- அரசு மருத்துவர்கள் கலந்தாய்வில் உள்ள குளறுபடிகளை முறைப்படுத்தி ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடை பெற வேண்டும் என அரசு மருத்துவர்க ளுக்கான சட்டப்போராட்டக் குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழகத்தில் புதிய ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடைபெற்றதற்காக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரி வித்தோம். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு, தங்கள் படிப்பை முடிக்கும் அரசு சாரா உயர் சிறப்பு மருத்துவர்களை, அவர்க ளுக்கு சம்பந்தமே இல்லாத பொது மருத்துவம், பொது அறுவை என சுமார் 70 மருத்துவர் பணியிடங்களில் பணி நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனால் அந்த துறைகளில் நுழைய நீண்ட காலமாக காத்திருக்கும் மூத்த மருத்துவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, துறை செயல்பாடுகளிலும் பின்னடைவை ஏற்படுத்தும். அடுத்து வரவி ருக்கும் பொது கலந்தாய்வில் ஏற்கனவே எம்எஸ், எம்டி முடித்து விட்டு, டிஎம்எஸ்-இல் பணிபுரிந்து வரும் தகுதியுள்ள மருத்துவர்க ளுக்கு அந்த காலிப் பணியிடங்கள் கிடைக்கா மல் போகும். மேலும் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து விட்டு, தற்போது சிறப்பு மருத்துவராக உள்ள மருத்து வர்களின், மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய விரும்பும் வாய்ப்பை அநியாயமாக தட்டிப் பறிப்பதாக உள்ளது. இது இதுவரை இல்லாத நடைமுறையாகவும், ஏற்கனவே இருக்கும் அரசாணைக்கு எதிராகவும் பணி நியமனம் செய்யும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்க்கிறோம்.
கடந்த ஆட்சியில் நடந்தது போலவே, ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகள் இந்த ஆட்சியிலும் நடைபெறுவது மிகுந்த வேதனை யளிக்கிறது. சட்டப்போராட்டக் குழு உள்ளிட்ட மருத்துவர் சங்க பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல், இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய அவசியம் என்ன. எனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மருத்துவக் கல்லூரி இயக்கு நரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்வ தோடு, நீண்டகாலமாக இங்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்க ளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.