tamilnadu

img

சென்னையில் மீண்டும் GoBackModi போஸ்டர்கள்!

சென்னையில் பல்வேறு இடங்களில் GoBackModi போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜுன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது; அதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் மே 30, ஜுன் 1 ஆகிய தேதிகளில் தியானம் செய்ய  இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி தியானம் என்ற பெயரில் மறைமுக பிரசாரம் செய்ய இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையில் பல்வேறு இடங்களில் GoBackModi போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், எக்ஸ் தளத்திலும் #GoBackModi இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
 

;