tamilnadu

img

அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி தோழர் ராமசாமி காலமானார் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி

சென்னை, மே 14- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பின ருமான ராமசாமி (75)  திங்களன்று (மே 13) காலமானார்.

இவர் 1984ஆம் ஆண்டு அரசு ஊழியர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு  பல்வேறு பொறுப்பு வகித்தவர். சேப்பாக்கம் பகுதியில் வலுவான சங்கத்தை அமைக்க பாடுபட்டவர். 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் உதயமானது முதல் இன்று வரை திறம்பட செயல்பட்டவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்,  தான் வசிக்கும் பெரம்பூர் பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பகுதி மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி யவர்.

எந்நேரமும் புத்தகங்களை ஆர்வமு டன் வாசித்துக் கொண்டே இருப்பார். மற்ற வர்களையும் வாசிக்கத் தூண்டுவார். மூத்த தோழர் மருத்துவமணியுடன் இணைந்து இலங்கை மக்களின் குறிப்பாக தமிழர்க ளின் “மௌனவரலாறு” என்ற புத்தகத்தை எழுதி பதிப்பித்தவர். தனது இறுதி மூச்சு வரை சங்கத்திற்காகவும், கட்சிக்காக வும் பாடுபட்டவர்.

பெரம்பூர் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட் டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வெற்றி ராஜன், அரசு ஊழியர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் நெ.இல.ஸ்ரீதரன், சென்னை மாவட்ட தலைவர் பி.எஸ்.அப்பர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

பின்னர் அவரது உடல் செவ்வாயன்று (மே 14) மாலை அதே பகுதியில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

;