tamilnadu

img

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூன் 1- இளநிலை கால்நடை மருத்து வப் படிப்புகளுக்கு ஜூன் 3 ஆம்  தேதி முதல் ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்  நடை மருத்துவ அறிவியல் பல்க லைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திரு நெல்வேலி, தஞ்சாவூர்-ஒரத்தநாடு,  சேலம் தலைவாசல், உடுமலைப் பேட்டை, தேனி-வீரபாண்டி ஆகிய  7 இடங்களில் கால்நடை மருத்துவக்  கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரி களில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட  கால்நடை மருத்துவம் மற்றும் பராம ரிப்பு படிப்புக்கு (B.V.Sc & AH)  660 இடங்கள் உள்ளன. இதில்  சென்னை, நாமக்கல், திருநெல் வேலி, ஒரத்தநாடு ஆகிய 4  கல்லூரிகளில் உள்ள 420 இடங்க ளில் மட்டும் அகில இந்திய ஒதுக்  கீட்டிற்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதுதவிர, திருவள்ளூர் மாவட் டம், கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்)  40 இடங்கள், பால்வளத் தொழில் நுட்பக் பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உண வுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்  டிற்கு ஒதுக்கப்படுகிறது. அதே போல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலா ண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த  3 பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பி.வி.எஸ்.சி. -  ஏ.எச். மற்றும் பி.டெக் படிப்பு களுக்கு 2024-25 ஆம் ஆண்டு மாண வர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 3 ஆம் தேதி, காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை  விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு  கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இந்த படிப்புகளுக்கு 12-ஆம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது.

7.5 சதவிகித உள் இடஒதுக் கிட்டின் கீழ் அரசு பள்ளிப் மாண வர்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் படிப்பில் 45 இடங்கள், உண வுத் தொழில்நுட்ப படிப்பில் 3  இடங்கள், பால்வளத் தொழில்நுட் பம் படிப்பில் 2 இடங்கள், கோழி யின தொழில்நுட்பப் படிப்பில் 3  இடங்கள் என மொத்தம் 53 இடங்கள்  ஒதுக்கப்படுகின்றன. இதுதொடர்பான தகவல் தொகுப்பு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும்  இதர விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ளன என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகம் தெரிவித்துள் ளது.

;