சென்னை, மே 20- தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு 1.73 லட் சம் மாணவர்கள் விண்ணப்பித்தி ருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்க லைக்கழகத்தின் கீழ் உள்ள பொறி யியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு மே 6 அன்று தொடங்கியது. முதல் நாளிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பொறி யியல் படிப்புகளுக்கு விண்ணப் பித்து வருகின்றனர். தொழில்நுட்ப கல்வி இயக்குநர கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இதுவரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 792 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 366 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி யுள்ளனர். 81 ஆயிரத்து 950 மாண வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண் ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.