tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

தங்கம் விலை குறைவு

சென்னை,ஜூலை 8- தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத் துடன் காணப்படுகிறது. சென்னையில்  திங்களன்று 22 கேரட் ஆபரணத் தங்கத் தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54  ஆயிரத்து 400 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படு கிறது.

தங்கம் விலை கிராமுக்கு  20 ரூபாய் குறைந்து 6 ஆயி ரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகி றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து 99  ரூபாய் 50 காசுகளாக  விற்பனை செய்யப்படு கிறது.

மாதவரம் இரும்பு குடோனில் தீ விபத்து

சென்னை, ஜூலை 8- புழல் பகுதியை சேர்ந்த அய்யனார் (30) என்பவர், மாதவரம் பொன்னியம்மன்மேடு 200 அடி சாலை ஜவஹர்லால் நேரு தெருவில் பழைய இரும்புப் பொருட்கள்  வாங்கி விற்கும் குடோன் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவு குடோனை மூடி விட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இந்த குடோனில் அருகே மேலே செல்லும் மின்சார வயரில் உராய்வு ஏற்பட்டு கேபிள் துண்டித்து  விழுந்தது. இதன் காரணமாக தீப்பொறி ஏற்பட்டு அந்த குடோனுக்கு வெளியில் இருந்த அட்டைப் பெட்டிகள், பேப்பர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தீ பற்றியதால் புகை சூழ்ந்து, சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் மாதவரம், செங்குன்றம், கொளத்தூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த குடோன் அருகே உள்ள ஏடிஎம் மையத்தின் வெளிப்புற ஷட்டர் மற்றும் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து மாதவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.