அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருப்பதாவது,
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். செந்தில்பாலாஜி குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்க வேண்டும்.
மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் அமர்வில், கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக, 3-ஆவது நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும், செந்தில்பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
செந்தில்பாலாஜி வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் மீண்டும் விசாரித்து, இறுதி தீர்ப்பை வழங்குவார்கள் என 3-ஆவது நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார்.