tamilnadu

img

டாஸ்மாக் கடையை அகற்றுக: கிராம மக்கள் போராட்டம்

ராணிப்பேட்டை,  ஜன.31- இராணிப்பேட்டை மாவட்டம்  வன்னிவேடு ஊராட்சியில் ரபிக்நகர், தென்றல் நகர் பகுதியில் ஏற்கனவே அரசு டாஸ்மாக் கடைகள் மூன்று இயங்கி வரும் நிலையில்  மேலும் நான்காவதாக ஒரு கடையை திறந்தனர். வன்னிவேடு ஊராட்சியில் கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி சாராட்சியரிடம் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரியும் வன்னிவேடு பகுதியில் கூடுதலாக டாஸ்மாக் கடை திறக்கப் படாது  என கிராம மக்களிடம் உறுதியளித்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அந்த கிராம மக்கள் மீண்டும் சாராட்சியரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அப்போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோபமடைந்த கிராம பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.