tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இனி மூன்றே நாட்களில் மின் இணைப்பு அரசு உத்தரவு
சென்னை, மே 16- மின்மாற்றி, பில்  லர் பாக்ஸ், மின்கம்  பம் ஆகியவை உள்ள இடங்களில்  மின் இணைப்பு கோரி விண்ணப்பித்  தால் 3 முதல் 7 நாட்க ளுக்குள் நுகர்வோ ருக்கு மின் இணைப்பு வழங்க அனைத்து  தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்  வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியரின் பாலியல் குற்றச்சாட்டு
கலாஷேத்ரா ஆசிரியருக்கு
ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

சென்னை, மே 16 - சென்னை திரு வான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001 வரை படித்த மாணவிகளில் ஒரு வர், முன்னாள் பேரா சிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலி யல் ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த  புகாரில் ஸ்ரீஜித் கிருஷ்ணா கடந்த மாதம்  கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு வியாழனன்று (மே 16)  விசாரணைக்கு வந்தது. இந்த விவ காரத்தில் பல மாணவிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஜாமீன் வழங்கினால் மற்ற மாணவர்கள் புகார் அளிக்க முன்  வர மாட்டார்கள் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று மாணவிகள் தரப்பில் கூறப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிமன்றம் மாணவிக்கு மனு தாக்கல்  செய்ய அனுமதி வழங்கி, விசாரணை யை மே 22-ஆம் தேதி ஒத்தி வைத்தது.

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி 

சென்னை, மே 16- தமிழகத்தில், ஜூன் 4 அன்று மக்க ளவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை யில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்கும்; அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதி ரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலு வலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு  செய்வார்கள் என்று தமிழக தலைமைத்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரி வித்துள்ளார்.

தமிழகத்தில் 20 செ.மீ. வரை மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, மே 16- தமிழகத்தில் கோடை வெயில் கடந்த  மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெ ரித்தது. இந்த நிலையில், தமிழகம் முழு வதும் பரவலாக கோடை மழை பெய்து  வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம்  குறைந்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை  கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் மே 19 வரை கன மழை மற்றும் மிக கனமழை நீடிக்கும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொல்.திருமாவளவனுக்கு பெங்களூருவில் சிகிச்சை
சென்னை, மே 16- மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்கு பெங்க ளூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக  தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ பதிவு வெளி யிட்டுள்ள அவர், “மக்களவைத் தேர்த லையொட்டி, தொடர்ந்து பிரச்சாரம் செய்  ததால் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருக்கிறேன். ஓரிரு நாட்களில் குண மாகும் என மருத்துவர்கள் கூறியிருக் கின்றனர்” என்று திருமாவளவன் குறிப் பிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 16- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் Manager Grade - III,  Senior Officer, Assistant Manager உட்பட பல பதவிகளுக்கு மொத்தமாக 118 காலிப்பணியிடங்களை அறிவித்துள் ளது.

இந்த பணிக்கு தொடர்புடைய துறை களில் அல்லது துறை சார்ந்த பாடங்க ளில் இளங்கலை, முதுகலை, CA, ICWA,  M¡õA, ¡õE என இதில் ஏதேனும் ஒரு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் கணிதத் திறன் சார்ந்த எழுத்துத் தேர்வில் கேள்வி கள் இருக்கும். தேர்வுகள் 28.07.2024 அன்று நடைபெறும். நிரப்பப்படும் பணி யிடங்களுக்கு தேவையான அனுபவம், கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14-ஆம் தேதிக்குள் https://tnpsc.gov.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;