போபால்:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சியோனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இதில் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து போபாலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி வேத் பிரகாஷ் சிங் கூறுகையில், மத்தியபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் அதிகாலை 1.45 மணியளவில் சியோனி நகரத்திற்கு அருகில் 4.3 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. பின்னர், அதே இடத்தில் காலை 6.23 மணிக்கு 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி யுள்ளது. இவ்விரண்டு நிலநடுக்கங்களிலும் விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.