tamilnadu

img

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்  

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும், பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரு தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதேபோல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் 20 ஆம் தேதி வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு இரு நாட்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

;