tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று திமுக  எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை, ஜூன் 7- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலை மையில் சென்னை அண்ணா அறிவா லயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 8) மாலை 6.30  மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறு கிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்கள் அனை வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

250 கி.மீ. வேகத்தில் பாயும் ரயில்கள் 
சென்னை ஐசிஎப் தயாரிப்பு

சென்னை, ஜூன் 7-
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. 1955-ஆம்
ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப் பட்ட இந்த ஐ.சி.எப். தொழிற்சாலையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணியில் ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை முக்கிய பங்காற்ற உள்ளது.

இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிவேகத்தில் செல்லும் 2 ரயில் கள் அங்கு தயாரிக்கப்பட உள்ளன. மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள் தயாரிப்பது தொடர்பாக கடந்த ஜூன் 4 அன்று ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து புதிய அதிவேக  ரயில்கள் இரண்டையும் தயாரிப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வேகம் 180 கி.மீ. ஆகும் புதிதாக தயாரிக்கப்பட உள்ள 250 கி.மீ. வேகம் கொண்ட 2 அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டு க்கு வரும் பட்சத்தில் அதுவே அதிவேக ரயிலாக இருக்கும்.

இந்த 2 ரயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இவ்வளவு அதி வேகத்தில் செல்லும் 2 ரயிலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் பணிகள் முடிந்து ரயில் இயக்கப்பட்டால், அது  புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பெரும்பான்மை இந்துக்கள்  பாஜகவை புறக்கணித்துவிட்டனர்”
விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை!

சென்னை,ஜூன் 7 ‘பாஜக பெற் றுள்ள வெற்றி யானது தோல்வி வின் வலி சுமந்த வெற்றி!’ என விடு தலைச் சிறுத்தை கள் கட்சியின் தலை வர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

“பெரும்பான்மை இந்துக்கள் பாஜக வைப் புறக்கணித்துள்ளனர்! அரசமை ப்புச் சட்டமும் ஜனநாயகமும் தற்காலி கமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன!

இந்த மக்களவை பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாஜ கவிற்கும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலுக்கும் சரி யான பாடம் புகட்டுவதாக அமைந்துள் ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியதி கார ஆணவத்தின் உச்சியில் நின்று ஆட் டம் போட்ட சனாதன – பெரு முத லாளித்துவ சுரண்டல் கும்பலின் இறு மாப்பை நொறுங்கியுள்ளது.

இத்தேர்தல், “சனாதன- கார்ப்ப ரேட்” கொள்ளை கும்பலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஒரு மாபெரும் அறப்போர் ஆகும். ஆட்சியமைப்பதற்கு பிற கட்சிகளின் தயவை நாடும் வகை யில்; அதிகார அகந்தை என்னும் நச்சுப் பற்களை பிடுங்கும் வகையில் இந்திய மக்கள் பாஜகவுக்கு எதிராக இத்தீர்ப்பை எழுதியுள்ளனர்.

இந்தியர்களை ‘இந்து சமூகத்தினர்’ என்றும், ‘இந்து அல்லாத பிற மதத்தி னர்’ என்றும் பாகுபடுத்தி தொடர்ந்து அர சியல் ஆதாயம் காணும் பாஜகவினரின் சாதி அரசியல் முயற்சிகளை முறி யடித்துள்ளனர். பெரும்பான்மை இந்துச் சமூகம் பாஜகவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மை யாகும்.

இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பு வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கு கிறேன். அத்துடன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர் களையும் வெற்றி பெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி யுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனை வருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.

லண்டன் செல்லும் தமிழ்நாடு மாணவர்கள்!

சென்னை, ஜூன் 6- தமிழ்நாடு அரசு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து, பொறியியல் மாணவர்களுக்கு சர்வதேச உயர் கல்வி அளிக்க உதவித்தொகை திட்டத்தை தொடங்கியது.

இதற்கு நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தமிழ்
நாட்டைச் சேர்ந்த தகுதி வாய்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அதில், 100 மாணவர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த மார்ச் 5 முதல் மார்ச் 16 வரை லண்டன் டர்ஹாம் பல் கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட 24  மணி நேர ஆன்லைன் பாடத்திட்டத்தை முடித்த நிலையில், தற்போது ஒரு வார ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்லவுள்ளனர். இந்த திட்டத்துக்கு சிறப்பாக செயல்பட 15 பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் ஜூன் 9 முதல் 16-ஆம் தேதி வரை லண்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். 
 

;