tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

தஞ்சாவூர், ஜூன் 5-  மண் வளத்தினை மேம்படுத்த பசுந்தாள் உரப்  பயிர்களை சாகுபடி செய்ய வேண்டுமென, பட்டுக் கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) திலக வதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நெற்பயிரைப் போன்று ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண்ணில் உள்ள சத்து களை அதிகளவில் பயிர்கள் எடுத்துக் கொள்கிறது. இத னால் மண்ணில் சத்துகள் பற்றாக்குறை ஏற்படுவதோடு மண்ணின் வளமும் குறைந்து விடுகிறது. மண்ணின் வளத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மண்ணில் கட்ட மைப்பு மற்றும் பௌதிகத் தன்மை, மண்ணில் நீர்  பிடிப்பு தன்மை மற்றும் நுண்ணுயிர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க முடியும். 

மண் வளத்தை மேம்படுத்த 50 சதவீத மானிய விலை யில், ஏக்கருக்கு 20  கிலோ பசுந்தாள் உர விதை மற்றும் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்கள்  ஆகியவை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம்  விநியோகம் செய்யப்பட உள்ளன. 

பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த பசுந்தாள் உரப்  பயிர்களை சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசா யிகள், சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர்களி டம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருப வருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

கும்பகோணம், ஜூன் 5- கும்பகோணத்தில் காயங்களுடன் மீட்கப் பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், செட்டிமண்ட பம், ஒத்தைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவ ருடைய தோட்டத்தில், பெண் மான் ஒன்று பலத்த காயங்க ளுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. 

இதனைப் பார்த்த அவர் நாய், காட்டுப் பூனை உள்ளிட்ட விலங்குகளால் மானுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்  கூடாது என்பதற்காக அந்த மானை பிடித்து தோட்டத்தில் பாதுகாப்பான இடத்தில் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு, கும்பகோணம் வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தார். தகவலின்பேரில் வனவர் இளங்கோவன் தலை மையிலான வனத்துறையினர், அங்கு விரைந்து சென்று  பலத்த காயம் அடைந்திருந்த மானை மீட்டு, வனத்துறை  அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 வய துடைய அந்த பெண் மான், வழிதவறி வந்திருக்கலாம். வயல் வெளிகளில் போடப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கி யதால், அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த மானுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து, மகா ராஜபுரம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் விட முடிவு செய் துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வாய்க்காலில் கொட்டப்படும்  குப்பைகளால் அவதி

பாபநாசம், ஜூன் 5 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதி கோயிலில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்தச் சாலையையொட்டி செல்லும் வடி கால் வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. 

இந்த வடிகால் வாய்க்கால் அருகில் மேல்நிலைப் பள்ளி, மருந்துக் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் மெயின் சாலையில் பெய்யும் மழை நீர் வடிவதற்காக உள்ள, இந்த வடிகால் வாய்க் கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி, தூர்வாருவதுடன், வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்கின்ற னர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவில், ஜுன் 5- கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை பெய்து வந்தது. அதைத் தொடர்ந்து வெயில் கொளுத்திய நிலையில் மீண்டும் சாரல்  மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஜுன் 4 செவ்வா யன்று மலையோர பகுதிகளான  பாலமோர் பெருஞ்சாணி, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

புதனன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பேச்சிப்பாறை உள்ளிட்ட வடமேற்கு பகுதிகளில் சாரல் மழை பொழிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதனன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 9.4 மில்லி  மீட்டர் மழை பெய்தது. பேச்சிப்பாறை  அணை நீர் மட்டம் 45.17 அடி ஆகும். அணைக்கு 434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 535 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62 அடியாகவும், அணைக்கு 298 கன அடி நீர் வந்து கொண்டும் இருந்தது. அணை மூடப்பட்டிருந்தது. இது போன்று குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும், குமரி - கேரளா எல்லை பகுதிகளி லும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

புதிய பேருந்திற்கு வரவேற்பு 

தூத்துக்குடி, ஜூன் 5 தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை, சேர்வைக்காரன் மடம் ஊராட்சி வழித்தடத்தில் இயக்கப்படும் 52A மற்றும் 52F பழைய  பேருந்து களுக்கு பதில் புதிய பேருந்து புதனன்று இயக்கப் பட்டது. இப்புதிய பேருந்துகளுக்கு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவரும் மத்திய ஒன்றிய துணைச் செயலா ளருமான ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில் சேர்வைக் காரன் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய பேருந்து களுக்கு  மாலை அணிவித்தும் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

 

 

;