tamilnadu

காலமானார்

சென்னை, ஏப். 22 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம்விளக்கு பகுதி, 117வது வட்டச் செயலாளர் மூ.வீரக்குமாரின் தந்தை வி.முத்துசாமி வெள்ளியன்று (ஏப்.19) காலமானர். அவருக்குவயது 67.செம்மஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர்கள் இ.மூர்த்தி (தி.நகர்),ஜி.வீரா (சோழிங்நல்லூர்) உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சனிக்கிழமையன்று (ஏப்.20) செம்மஞ்சேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 


திருவள்ளூர்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழவரம் ஒன்றியக்குழு உறுப்பினரும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவருமான கே.அமரேசன் மனைவி ஏ.செல்வி காலமானார். அவரது வயது 45.சோழவரம் அருகில் உள்ள அலமாதியில் வசிக்கும்கே.அமரேசன் மனைவி ஞாயிறன்று இரவு திடீரென காலமானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் அ.து.கோதண்டன், எம்.சந்திரசேகரன், ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த செல்வியின் உடலை திங்களன்று மாலை அவரின் சொந்த ஊரான அலமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.