tamilnadu

img

தனுஷ்கோடி ராமசாமி நினைவு நாள்....

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் உள்ளகே. மேட்டுப்பட்டியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பள்ளிக்கூடஆசிரியராக இருந்தார். கலை மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்று சாத்தூரில் உள்ள ஆயிர வைசிய உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன்னுடைய இலக்கிய செயல்பாடுகளுக்கு ஆசிரியர் பணி இடையூறாக உள்ளதாக உணர்ந்ததால் அப்பணியை துறந்தார். பின்னர் மீண்டும் அதே பள்ளியில் முதுகலைஆசிரியராகப் பணியாற்றினார்.இளமைக்காலத்தில் தனித்தமிழ் இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கைகளின் ஆதரவாளராக இருந்த அவர் அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் அவர் மார்க்சியத்தின் ஆதரவாளராக மாறினார். இவரது முதல்சிறுகதை சிம்ம சொப்பனம் 1978 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் பலசிறு கதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தோழர் என்ற நாவல் இவரது சிறந்த படைப்பு ஆகும். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தன. 1990 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீட்டு அங்கமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்இவருக்கு சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளர் என்ற விருது வழங்கியது. 1992 இல் தீம்தரிகிட என்ற இவரது நாவலுக்காக லில்லி தேசிகமணி நினைவு விருதினைப் பெற்றார். 1991 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வைர விழா சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றார். அக்னி சுபமங்களாநடத்திய 94 ஆவது சிறுகதை போட்டியில் முதல் பரிசினை வென்றார். தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பொதுச் செயலாளராக இருந்தபோது நீண்டகாலமாக நோயினால்பாதிக்கப்பட்ட இவர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று காலமானார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;