தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ராணிப்பேட்டை மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் கே.ஆர். பிரபாகரன் தலைமையில் வியாழனன்று (ஜூன் 13) முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில செயற்குழு பா. குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரகு, எம். குமரன், வாலாஜா மேற்கு வட்டாரச் செயலாளர் எம். மோகன், மாவட்ட செயலாளர் செ. சரவணன், வடக்கு மண்டலம் மாநில செயலாளர் எஸ். கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் இ. மின்னி செலினா ஆகியோர் பேசினர்.