tamilnadu

img

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று 
தலைமை
 தேர்தல் அதிகாரியிடம் சிபிஐ (எம்) வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து
கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

21.12.2020 அன்று அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரிகள் நடத்திய
சந்திப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு
உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன்,
மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும்
வலியுறுத்தி எழுத்துப்பூர்வமான மனு தேர்தல் ஆணையத்திடம்
சமர்ப்பிக்கப்படடது. அம்மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அது தவிர,
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை (2021) ஒரே கட்டமாக நடத்த வேண்டும்,
வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 2021,
ஜனவரி 31 வரை நீட்டிக்க வேண்டுமென கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. நிவர்,
புரெவி, புயல், மழை, வெள்ளம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், சில
மத்திய மாவட்டங்களிலும் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் போதுமான
அளவில் வாக்களர் சேர்ப்பு பணி சரிவர நடத்த முடியாத சூழலில் புதிய வாக்காளர்
சேர்ப்பு, நீக்குதல், இணைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய இந்த
கோரிக்கையை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

;