tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் வெளிவரும்.... பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

புதுதில்லி:
இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து கோவேக்சின் குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்மற்றும் தேசிய வைராலஜி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்சின் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்த தடுப்பு மருந்துக்கான மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் கடந்த திங்கட்கிழமை யில் இருந்து தொடங்கியுள்ளன.இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தரத்திற்கான செயல் தலைவர்சாய் பிரசாத் ஞாயிறன்று கூறுகையில்,  உலகசுகாதார அமைப்பு, அமெரிக்காவின் உணவு -மருந்து நிர்வாகம் மற்றும் இந்தியாவின் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் 50 சதவீதம் பூர்த்தி செய்து விட்டாலே அவற்றுக்கு ஒப்புதல் வழங்குகின்றன.கோவேக்சின் தடுப்பு மருந்து குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும்.  அதற்கு கூடுதலாகவும் சிறப்புடன் செயல்பட முடியும். இதனை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பு மருந்து வருகிற 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.