செவ்வாய், செப்டம்பர் 28, 2021

tamilnadu

img

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா...

சென்னை:
மருத்துவப் படிப்புக்கான முதல் நாள் கலந்தாய்வில்  பங்கேற்ற மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

2020-21ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 18 அன்று தொடங்கியது. அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங் களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில் (பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ்.  இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந் தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக் கீடு அடிப் படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், மருத்துவ கலந் தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப் பட்ட கொரோனா பரிசோதனையில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

;