tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த போது ஒரு வித பிரசாரத்தையும், வடமாநிலங்களுக்கு சென்ற போது மதங்களை வேறுபடுத்தியும், பின்னர் வடக்கு, தெற்கு என்றும் கூறினார். தொடர்ந்து குழந்தை ராமர் குடிசையில் இருந்தார், அவரை நாங்கள் கொண்டு வந்து கோபுரத்தில் வைத்துள்ளோம் என்றார். இது போதவில்லை என்று நான் தியானம் மேற்கொள்கிறேன் எனக் கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார். பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி பிரசாரம் செய்யவில்லை.மாறாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மத, சாதி ரீதியான பிரச்னைகளை பேசியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

“தேர்தல் முடிவுகளுக்கு பின்பு “இந்தியா” கூட்டணி காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. அண்ணாமலை அரசியலுக்கு வந்தது முதல் தவறான கருத்துக்களை, வதந்திகளை மட்டுமே சொல்லி வருகிறார். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியையும் காணாமல் போய்விடும் என்று யாரும் சொல்ல முடியாது. அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அண்ணாமலை பேசியது சர்வாதிகாரத்தனமான பேச்சு” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

“பாஜகவின் “பழைய சாதம்” தொடர்பான வீடியோ மூலம் தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் பாஜக அவமதிக்கிறது ஒடிசா பாஜக வெளியிட்டுள்ள வீடியோக்களில் தமிழ்நாடு தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. இதற்குத்தான் தமிழ்நாட்டில் சங்கிகள் சந்து சந்தாக விரட்டப்படுகிறார்கள்” என திமுக தகவல் தொழிநுட்ப செயலாளர் டிஆர்பி ராஜா கூறினார்.

;