tamilnadu

img

காங். மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), புதனன்று நவம்பர் 25 அதிகாலை காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதனன்று அதிகாலை அவர் காலமானார்.அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் மறைவு அறிந்து வருத்தமுற்றேன்.அகமது பட்டேல் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், காங்கிரஸ் தொண்டர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.