திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

நுங்கம்பாக்கத்தில் கோலப்போட்டி

சென்னை, ஜன. 4- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளிடையே கோலப்போட்டி சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (பொ) ச.ப.கார்த்திகா முன்னிலை வகித்தார். கோலப் போட்டியில் 46  மகளிர் சுய உதவிக் குழுக்க ளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு  தானிய வகைகளைப் பயன்படுத்தி  வாக்களிப்பதின் அவசியம் குறித்து, தேசியப் பறவை மயில் மற்றும் இந்திய வரைபட வடிவில் வண்ணக் கோலங்கள் போட்டனர். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடை பெற்ற வாக்காளர் விழிப்பு ணர்வு கோலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் இணை தேர்தல் அதிகாரி வி.மணி கண்டன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் சி.கே.வீரணன், பொது மேலாளர் சி.சந்தோஷினி சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;