tamilnadu

கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் ஜூன் 1-இல் திறப்பு

சென்னை, மே 29- சென்னை மாநகருக்குள் போக்கு வரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம் பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

 அனைத்து பேருந்துகளும் கிளாம் பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில், நீதி மன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகரு க்குள் உள்ள அவர்களது பணிமனை களில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதி கோரினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆம்னி பேருந்துகள் ஜூன் 2 வரை சென்னை நகருக்குள் இருந்தே புறப்பட இடைக்கால அனுமதி வழங்கியது.

இதனிடையே, தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்து களும், மே 31-ஆம் தேதிக்குப் பிறகு, கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று மீண்டும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. தாம்பரம் முடிச்சூர் அருகே அமைந் துள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் போதிய இடவசதி இல்லை என கூறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறையில் பேருந்துகளை நிறுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னை யில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்து களும் ஜூன் 1 முதல் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;