சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கிறது. இதனால் நாளையும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை 10 மணிமுதல் சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், மழையில் அளவைப்பொறுத்து நாளை காலை 10 மணிவரை ரயில்கள் இயக்கப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.