tamilnadu

img

கடும் எதிர்ப்பையடுத்து பின்வாங்கியது சிபிஎஸ்இ 

10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த பாலின பாகுபாடு குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அதில்
இதில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக வாக்கியம் கொடுத்து விடையளிக்கும் பகுதி இடம் பெற்றிருந்தது. இதில், மனைவிமார்கள் வலுப்பெறுவது பெற்றோர் என்ற கட்டமைப்பை வலுவிழக்க செய்கிறது. இளம் தலைமுறையினர் தந்தையின் பேச்சை வேதவாக்காக மதிப்பதில்லை. முன்பு கணவர்களுக்கு மனைவிமார்கள் கீழ்ப்படிந்த நிலையில் தற்போது அப்படியான சூழல் இல்லை. குழந்தைகளையும், வேலையாட்களையும் அவர்களுக்கான இடத்தில் வைக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  பெண்களுக்கு எதிராக இடம்பெற்றிருந்த இந்த வாக்கியத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இவ்விவகாரத்தை  இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில்  எழுப்பினார். ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
எதிர்ப்புகள் வலுவடைந்ததை தொடர்ந்து நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
 

;