வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

குடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....

சென்னை:
கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளிகளிலும் எளிமையான முறையில் குடியரசுத்தினம் கொண்டாடப் படவுள்ளது. கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் இந்த விழாவை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

;