tamilnadu

img

சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது

தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு டிச.,5 ல் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது வழங்கப்படவுள்ளது.

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து தமிழ் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விழாவானது சென்னையில் டிச.,5 நடைபெறுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய இயற்கை மருத்துவமான சித்த மருத்துவம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இதனை,  தமிழக அரசால் சித்த மருத்துவ கல்லூரியாக அமைக்கப்பட்டு அதன் மூலம் மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. 
மேலும் தற்போது சித்த மருத்துவத்தின் சிறப்பையும் அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக மக்களுக்கு சித்த மருத்துவத்தை விரிவாக்கம் செய்யவும் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

மேலும் இந்நிகழ்வில் மருத்துவர்களை தேர்ந்தெடுக்க மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சித்த கல்லூரி மற்றும் இந்திய மருந்தக இயக்குனரகம், இம்மூன்று அரசு அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் மாநில, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தகர்சங்க மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.