tamilnadu

img

கடலோர மக்களுக்கு வேண்டுகோள்....

சென்னை:
நிவர் புயல் கரையைக் கடப்பதால் கடற்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல்  காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டிக் கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, சித்திரைப்பேட்டை, ஐயம் பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் வாழும் மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.அரசு அதிகாரிகளின் அறிவிப்பை ஏற்றுக் கரையோரப் பகுதி மீனவர்கள் பள்ளிகள், அரசு கட்டடங்களில் அமைக் கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்றுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் படகுகள் நிறுத்தப் பட்டுள்ளன.படகுகளை இன்னும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல பொக்லைன், டிராக்டர்களை அனுப்பி உதவ வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதி தீவிரப் புயல் கரையைக் கடப்பதையொட்டிக் கடலூர் துறைமுகத்தில் பேரபாயத்தின் குறியீடாகப் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.புயலின் எதிரொலியாகக் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இந்நிலையில்  கடலூரில் கடற் கரையோரக் குடியிருப்புகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல நகராட்சி அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம்  வேண்டுகோள் விடுத்தனர்.

வீடுகள் சேதம்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் அதிகமானதால் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது ஒருநாள் கரையோரத்தில் இருந்த வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கிராமத்தை ஒட்டி இருந்த தென்னை மரங்கள் படகுகள் அனைத்தும் அலைகள் இழுத்துச் சென்றன.கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா கிராமத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. வழக்கத்தைக் காட்டிலும் கடலலை சீற்றம் அதிகரித்தது. மேலும் கடலூர் துறை
முகத்தில் பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

;