tamilnadu

img

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிப்பு....

சென்னை:
2019ஆம் ஆண்டில் வெளியான  நூல்கள், ஆவணப்படங்கள்  குறும்படங்கள் ஆகியவற்றிலிருந்து தமுஎகச விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழாவுக்கான தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா ஆகியோர் அறிவித்துள்ளனர். விருதுபெற்ற படைப்புக்கள் வருமாறு:

தோழர். கே. முத்தையா நினைவு விருது : 

தொன்மைசார் நூல்: பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் - முனைவர்.வெ.வேதாச்சலம், தனலட்சுமி பதிப்பகம்  

                                ********************

கே.பி.பாலசந்தர் நினைவு விருது:

நாவல், உயிர்வாசம் - தாமரைச் செல்வி, சிந்தன் புக்ஸ் 

                                ********************

சு.சமுத்திரம் நினைவு விருது:

விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு, சாந்தி என்கிற நஜிமுன்னிசா – சக்தி பகதூர், சந்தியா பதிப்பகம் , கொண்டல் – ஷக்தி, யாவரும் பதிப்பகம், (இரு நூல்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது)

                                ********************

இரா. நாகசுந்தரம் நினைவு விருது:

கலை இலக்கிய விமர்சன நூல், சிங்கப்பூர் இலக்கியம் (கருத்தரங்கக் கட்டுரைகள்)  – முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி,  ஸ்ரீலக்ஷ்மி வெளியீடு வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு 
விருது: கவிதைத்தொகுப்பு, இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர் கள்? - சமயவேல், தமிழ்வெளி வெளியீடு

                                ********************

அகிலா சேதுராமன் நினைவு விருது:

சிறுகதைத்தொகுப்பு, லண்டன் 1995 – இராஜேஸ் வரி பாலசுப்ரமணியம், ரிவர் தேம்ஸ் பப்ளிகேஷன்ஸ்

                                ********************

வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது:

மொழிபெயர்ப்பு, நிழல் இராணுவங்கள் -  இ. பா. சிந்தன், எதிர் வெளியீடு பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம், மீனா -  இயக்கம்: தனசேகர் மோகன் 

                                ********************

என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம், தேவரடியாரின் சதிர்: முத்துக்கண்ணம்மாளின் வாழ்வும் கலையும் – இயக்கம்: சண்முகநாதன்

                                ********************

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது:

குழந்தைகள் இலக்கிய நூல், ஒற்றை சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன், பாரதி புத்தகாலயம்

                                ********************

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: 

மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல், முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு (1905-2018) – அ.செல்வராசு, காவ்யா பதிப்பகம்