tamilnadu

img

இன்று வாக்கு எண்ணிக்கை: அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

சென்னை, ஜூன் 3 - 18-ஆவது நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங் களாக நடைபெற்றது. இந்த தேர்த லில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க ப்பட உள்ளன. இதையொட்டி, விரி வான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் பதி வான வாக்குகள் அடங்கிய மின் னணு இயந்திரங்கள், அஞ்சல்  வாக்குகள் அந்தந்த வாக்கு எண் ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங் களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வேட்பா ளர்களின் முகவர்கள் இரவு-பக லாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.

45 நாட்கள் காத்திருந்த தமிழகம் - புதுச்சேரி

இந்நிலையில், செவ்வாயன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று  தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே  கட்டமாக ஏப்ரல் 19 அன்றே தேர்தல் நடைபெற்று முடிந்தது. அந்த வகை யில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மக்கள், தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள சுமார் 45 நாட் களாக காத்திருந்தனர். இந்நிலை யில் ஜூன் 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கு கிறது. 

234 அறைகளில்  வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் பணியில்,  4 ஆயிரத்து 500 நுண்பார்வையாளர் கள் உள்பட 38 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு  எண்ணிக்கையானது, தனித்தனி யாக வீடியோ பதிவு செய்யப்படு கிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் அமைந்துள்ள, 43 கட்டடங்களில் 234 அறைகளில் நடைபெற உள்ளது. இந்த மையங் களின் அனைத்து நடவடிக்கை  களும் கேமிராக்கள் மூலம் கண் காணிக்கப்படுகின்றன.

பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார் 

அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3 ஆயிரத்து 300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உத வியாக மின்னணு இயந்திரங் கள் எடுத்து வருதல் உள்ளிட்ட வற்றுக்காக 24 ஆயிரம் பேர், நுண் பார்வையாளர்கள் 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

எண்ணிக்கை கண்காணிக்கும்  39 ஐஏஎஸ் அதிகாரிகள்

வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதி க்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையா ளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தொகுதிக்கு ஒரு  அதிகாரி வீதம், 39 தொகுதிகளுக் கும் 39 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவுப்படி, சில தொகுதிகளுக்கு கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதன் அடிப்படை யில், மாநிலத்தில் மொத்தம் 58  ஐஏஎஸ்., அதிகாரிகள் பார்வையா ளர்களாக வாக்கு எண்ணும் போது பணிகளை மேற்கொள்ள உள்ள னர். இவர்களது பணிகளை ஒருங்கிணைக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 தொடர்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோர், பார்வையாளர்களின் பணிகளை ஒருங்கிணைத்து வரு கின்றனர்.

‘அஞ்சல்-வாக்குகளை-சேர்த்தே-சுற்று-முடிவு-அறிவிக்கப்படும்’

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும்.

அஞ்சல் வாக்குகள் சரியாக 8 மணிக்கு எண்ண தொடங்கப்படும். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் அங்குள்ள அரசியல் கட்சி முகவர்களுக்கு அறிவிக்கப்படும். 

மேலும் அங்குள்ள கரும்பலகையில் எண்ணிக்கை விவரங்கள் எழுதி வைக்கப்படும். ஆனால் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அஞ்சல் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும்.

அஞ்சல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்குள் எண்ணி முடிக்கப்படும். அஞ்சல் வாக்கு எண்ணிக்கை 8.30 மணியை தாண்டி சென்றாலும், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

கட்டுப்பாட்டு அறையில்  புகார் அளிக்கலாம்!

வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்களைப் பெற தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையின் போது ஏதாவது 5 ஒப்புகைச் சீட்டு இயந்திரம் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணி சரிபார்க்கப்படும். வாக்குகளை மீண்டும் எண்ணப்பட வேண்டும் என புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுப்பார்.

சோழிங்கநல்லூரில் 30 மேஜைகள்

3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண அதிக மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் 30, கவுண்டம்பாளை யம் 20, பல்லடம் 18 மேஜைகள் அமைக்கப்பட்டுள் ளன. மற்ற அனைத்து இடங்களிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்தி ரங்கள் எண்ணிக்கை ஒன்றிற்கும் மேற்பட்டு இருப்ப தால் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கும் நேரம் அதிகமாகும்.  வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள் செல்போன் உபயோகிக்க அனுமதி கிடையாது.

முடிவுக்கு வரும் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6-ஆம்  தேதியுடன் முடிவு பெறும். மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் அந்த இரண்டு நாட் களில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 

;