சென்னை, டிச. 30 பல துறைகளில் சாதனை படைத்த 400 பெண்களுக்கு சென்னையில் நடந்த பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரம் குறித்த மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. சைரா பில்ஸ் மீடியா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில புற்றுநோயை வெற்றி கரமாக எதிர்கொண்டு வென்ற நீரஜா மாலிக், நடிகர் ஜான் விஜய், பாடகர் நரேஷ், தொழில் முனைவோர் சபரி நாயர், நிதேஷ் பண்டாரி, மற்றும் பலதுறைகளை சேர்ந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சைராபில்ஸ் மீடியா மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் தீபக் தத்தார் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை ஊக்கப்படுத்தவும் இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக கூறினார். தொழில் துறை , பெண் உரிமைகள் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, விலங்குகள் நலம், கலை மற்றும் கலாச்சாரம், பெண் குழந்தைகள் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இலக்கியம், ஊடகம் ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்றார்.